திங்கள், 8 ஜூன், 2009

வல்லாரை

அறிவின் சக்தி, குரல் ஒலி, ஞாபக சக்தி ஆகியவற்றை வளர்ச்சியுறச் செய்ய
துவர்ப்புச் சுவையுடைய வல்லாரை கசப்பாகவும், இலேசானதாகவுமுள்ள சரக்காகும். இது குளிர்ச்சியானது ; அறிவின் சக்தி, குரல் ஒலி, ஞாபக சக்தி ஆகியவற்றை வளர்ச்சியுறச் செய்கிறது. இது குஷ்டம், இரத்தத் தாதுவைப் பற்றிய நோய்கள், இருமல் ஆகியவைகளுக்கான சிகிச்சையில் பயனுள்ளதாகிறது.

வல்லாரை பச்சை இலையை எடுத்து புளியுடனாவது அல்லது எலுமிச்சம் பழச்சாற்றுடனாவது உப்பும் மற்ற மசாலாக்களுடன் ( அதாவது ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருள்களுடன் ) சேர்த்து சட்னியாக உபயோகிக்கலாம்.
வல்லாரை சரசம் ஙூ அவுன்ஸ் தேனுடன் கலந்தாவது, 1 பங்கு காய்ந்த வல்லாரை இலையுடன் 8 பங்கு வெந்நீர் சேர்த்து ஊரல் கஷாயமாகவாவது ஙூ முதல் 2 அவுன்ஸ் வரை கொடுக்கலாம்.

ஒரு தேக்கரண்டி அளவு உலர்ந்த வல்லாரை இலையை ஒரு கோப்பை கொதிக்கும் நீரிலிட்டுத் தேயிலை பானம் போல ஊறல் கஷாயம் செய்து, சர்க்கரையும் பாலும் சேர்த்து அருந்தலாம்.

உபயோகங்கள் : ஞாபகத்திற்கும், மூளைக்கும் நிரம்ப வேலை தந்து களைத்துப் போகும் சமயத்திலும் பயன்படுத்த இது ஒரு புகழ்பெற்ற டானிக் ( உரமாக்கி ) ஆகும். இது பேச்சுத் திறனை வளர்ப்பதற்கும், சிறப்பாகப் பேசுவதில் குறையுள்ளவர்கட்கும் புகழ்பெற்ற சரக்காகும். கவி பாடும் திறனையும் வளர்க்கும். காக்கை வலிப்புக்கும், மூளைக் கோளாறுகளுக்கும் இது உபயோகிக்கப்படுகிறது.

எல்லாவகை சுரங்கட்கும் இதன் இலை, துளசி இலை, மிளகு இவைகளைச் சம எடை சேர்த்தரைத்துக் குன்றி எடை மாத்திரைசெய்து ஒரு நாளைக்கு இருவேளை தர அவை சாந்தப்படும்.

இலையை அரைத்துக் கட்ட யானைக்கால், அண்டவீக்கம், வாதவீக்கம், கட்டிகளின் வீக்கம், அடிப்பட்ட வீக்கம் குணமாகும்.

குழந்தைகட்கு உண்டாகும் சருமநோய், இரத்தக் கேடு, நரம்பு நோய் முதலியவைகட்கும், முதிர்ந்த வயதுடையவர்களுக்கு உண்டாகும் வயிற்று நோய், சுரம் முதலியவைகட்கும்

இலைசாறுடன் பசுவின் பாலும், அதிமதுரமும் சேர்த்துக் கலந்து கொடுத்து வர மிக்க பலன் தரும்.

இரத்தக் கொதிப்பால் உண்டாகும் கொப்புளங்களைப் போக்க இலை சுரசத்துடன் கடப்பம்பட்டை, கருஞ்சீரகம், நெய் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக