திங்கள், 8 ஜூன், 2009

சுவையும், சுகமும் தரும் கனி வகைகள்

ஆப்பிள் :-
இரும்புச்சத்து, ஆர்சனிக் சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்டது ஆப்பிள். ரத்த சோகையை போக்குவதற்கான அருமருந்து ஆப்பிள்.

விளாம்பழம் :-
மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, பெப்டிக் அல்சர் மற்றும் நுரையீரல் கோளாறுகளை நீக்குகிறது விளாம்பழம்.

வாழைப்பழம் :-
ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி அளவு சத்து உள்ளது. உணவு செரிமானத்திற்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது வாழைப்பழம். வாழைப்பழத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் நரம்புகளும், தசைகளும் இலகுவாக செயல்படுவதற்கு உதவுகிறது.

திராட்சை :-
உணவு செரிமானத்திற்கு உதவும் திராட்சை, காய்ச்சலின் போது ஏற்படும் பலவீனத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மாம்பழம் :-
கல்லீரலில் ஏற்படும் உபாதைகளுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டும். உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களான இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை உருவாவதற்கு மாம்பழம் பயன் படுகிறது.

ஆரஞ்சு : -
வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது ஆரஞ்சு. மனித உடலில் பொதுவாக ஏற்படும் ஜலதோஷம், ஃபுளு காய்ச்சல், இரத்தப் போக்கு முதலியவற்றை கட்டுப்படுத்த உதவும்.

பப்பாளிப் பழம் :-
பப்பாளியில் வைட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது. கல்லீரலுக்கு ஏற்ற உணவு பப்பாளி. மேலும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

அன்னாசி :-
மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.

செர்ரீபழம் :-
செர்ரீ பழத்தில் உள்ள தாதுப் பொருள் யூரிக் அமிலம் உருவாவதை தடுக்கிறது மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

காய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்

கத்தரிக்காய்
இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.
இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய்
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

வெண்டைக்காய்
இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.


வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.


புடலங்காய்
இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரங்காய்
இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

வாழைத்தண்டு
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.
இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.

தேங்காய்
இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.
தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.

சுரைக்காய்
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.
ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி கசப்புச் சுவையுடையது ; உஷ்ணம் செய்யும். வறட்சியையுடையது. இது கபம், சோபை, ஆமதோஷம் ஆகியவற்றைக் கண்டிக்கிறது அல்லது தணிக்கிறது.

சருமநோய், பாண்டு, இருதயநோய், விஷம் ஆகியவற்றைப் பரிகரிப்பதில் பயன்படுகிறது.

ஐந்து அல்லது 10 கரிசாலை இலைக் கொழுந்துடன் 5 அல்லது 7 மிளகைச் சேர்த்து மோர்விட்டு அரைத்து மாத்திரை யாக்கியேனும், வெல்லம் சேர்த்து மாத்திரை செய்தேனும் காலையில் கொடுக்கலாம் ; ஒரு தேக்கரண்டி அளவு அல்லது ஒரு அவுன்ஸ் கரிசாலை இலைச்சாற்றுடன் இரண்டு அல்லது நான்கு அவுன்ஸ் பாலுடன் சிறிதளவு சர்க்கரை கலந்தேனும், அல்லது 4 அவுன்ஸ் மோர் கலந்து அதனுடன் சிறிது உப்புச் சேர்த்தும் காiயில் தினந்தோறும் கொடுக்கலாம் ; கரிசாலை இலையுடன் புதிய இஞ்சி, மிளகு, உப்பு, பிற ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருள்களுடன் சட்டினி அரைத்துத் தரலாம்.

செய்கை : பித்தநீர் பெருக்கி ; குளிர்ச் சுரமகற்றி வெப்பகற்றி ; உரமாக்கி .

உபயோகங்கள் : காமாலை நோயைத் தீர்ப்பதற்குப் பச்சிலைகளில் கரிசலாங்கண்ணி மிகப் பிடித்தமான மூலிகையாகத் தென்னாட்டில் வழங்கப்படுகிறது. காமாலை நோயின் சிலவகைகளில் இது பிரசித்தமான பயனைத் தருகிறது. பாண்டு நோயுடன் தோன்றுகின்ற தாழ்ந்த சுரங்கட்குக் கரிசாலையோடு மிளகு சேர்த்துச் செய்யப்பட்ட மாத்திரை நல்ல குணத்தைத் தருகிறது ; அதாவது நற்பலனை அளிக்கிறது. நல்ல செரிமானம் இல்லாத நோய்களில், மோருடன் சேர்த்துச் செய்யப்பட்ட கரிசாலை மாத்திரையை தேர்ந்தெடுக்கவும். தலைமயிரைக் கருக்க வைக்கவும், தலை மூழ்கிய பிறகு மூளைக்கு குளிர்ச்சியாயிருக்கவும் நாடு முழுவதும் கரிசலாங்கண்ணித் தைலம் புகழுடன் பயன்பட்டு வருகிறது.

இலைச்சாறு 90 துளி அதனுடன் நீர் அல்லது மோர் சேர்த்துச் சாப்பிட, பாம்புக்கடி விஷம் போகும்.

இலைச்சாறு 2 துளி, 8 துளி தேனில் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளக்கு உண்டாகும் ஜலதோஷம் நீங்கும்.

தேள்கடிக்கு கரிசலாங்கண்ணி இலைகற்கத்தை கடித்த இடத்தில் நன்றாய்த் தேய்த்து அதையே அவ்விடத்தில் வைத்துக் கட்டினால் விஷம் நீங்கும்.
வேர்ச் சூரணத்தைக் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கும், சர்ம வியாதிகட்கும் கொடுக்கலாம்.

வல்லாரை

அறிவின் சக்தி, குரல் ஒலி, ஞாபக சக்தி ஆகியவற்றை வளர்ச்சியுறச் செய்ய
துவர்ப்புச் சுவையுடைய வல்லாரை கசப்பாகவும், இலேசானதாகவுமுள்ள சரக்காகும். இது குளிர்ச்சியானது ; அறிவின் சக்தி, குரல் ஒலி, ஞாபக சக்தி ஆகியவற்றை வளர்ச்சியுறச் செய்கிறது. இது குஷ்டம், இரத்தத் தாதுவைப் பற்றிய நோய்கள், இருமல் ஆகியவைகளுக்கான சிகிச்சையில் பயனுள்ளதாகிறது.

வல்லாரை பச்சை இலையை எடுத்து புளியுடனாவது அல்லது எலுமிச்சம் பழச்சாற்றுடனாவது உப்பும் மற்ற மசாலாக்களுடன் ( அதாவது ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருள்களுடன் ) சேர்த்து சட்னியாக உபயோகிக்கலாம்.
வல்லாரை சரசம் ஙூ அவுன்ஸ் தேனுடன் கலந்தாவது, 1 பங்கு காய்ந்த வல்லாரை இலையுடன் 8 பங்கு வெந்நீர் சேர்த்து ஊரல் கஷாயமாகவாவது ஙூ முதல் 2 அவுன்ஸ் வரை கொடுக்கலாம்.

ஒரு தேக்கரண்டி அளவு உலர்ந்த வல்லாரை இலையை ஒரு கோப்பை கொதிக்கும் நீரிலிட்டுத் தேயிலை பானம் போல ஊறல் கஷாயம் செய்து, சர்க்கரையும் பாலும் சேர்த்து அருந்தலாம்.

உபயோகங்கள் : ஞாபகத்திற்கும், மூளைக்கும் நிரம்ப வேலை தந்து களைத்துப் போகும் சமயத்திலும் பயன்படுத்த இது ஒரு புகழ்பெற்ற டானிக் ( உரமாக்கி ) ஆகும். இது பேச்சுத் திறனை வளர்ப்பதற்கும், சிறப்பாகப் பேசுவதில் குறையுள்ளவர்கட்கும் புகழ்பெற்ற சரக்காகும். கவி பாடும் திறனையும் வளர்க்கும். காக்கை வலிப்புக்கும், மூளைக் கோளாறுகளுக்கும் இது உபயோகிக்கப்படுகிறது.

எல்லாவகை சுரங்கட்கும் இதன் இலை, துளசி இலை, மிளகு இவைகளைச் சம எடை சேர்த்தரைத்துக் குன்றி எடை மாத்திரைசெய்து ஒரு நாளைக்கு இருவேளை தர அவை சாந்தப்படும்.

இலையை அரைத்துக் கட்ட யானைக்கால், அண்டவீக்கம், வாதவீக்கம், கட்டிகளின் வீக்கம், அடிப்பட்ட வீக்கம் குணமாகும்.

குழந்தைகட்கு உண்டாகும் சருமநோய், இரத்தக் கேடு, நரம்பு நோய் முதலியவைகட்கும், முதிர்ந்த வயதுடையவர்களுக்கு உண்டாகும் வயிற்று நோய், சுரம் முதலியவைகட்கும்

இலைசாறுடன் பசுவின் பாலும், அதிமதுரமும் சேர்த்துக் கலந்து கொடுத்து வர மிக்க பலன் தரும்.

இரத்தக் கொதிப்பால் உண்டாகும் கொப்புளங்களைப் போக்க இலை சுரசத்துடன் கடப்பம்பட்டை, கருஞ்சீரகம், நெய் சேர்த்து அரைத்துப் பூசலாம்.

பாகற்காயின் மருத்துவ குணங்கள்

இது சூடு உண்டாக்கும். இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.

பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும். இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும்.

பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.
பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு ( கண்ணாடி விரியன் ) கடித்த விஷம் நீங்கும்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை ட்டுப்படுத்தும்.

தக்காளி

இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.

மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.


முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.

இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.

மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வாடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.
சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.
தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.
மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது. இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன. இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.
தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.


கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.
அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.
வைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.
மற்றும் வைட்டமின் ‘பி’யும் ‘சி’யுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் ‘டி’கூட இருக்கிறது.

தக்காளியில் இத்தனை நல்ல குணங்கள் இருப்பதால் கூடுமானவரைப் பெரியோர்களும் வளரும் குழந்தைகளும் நிறைய தக்காளி சாப்பிடுவது நல்லது.

பப்பாளி

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷயம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் சாதத்தில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

முருங்கையின் மருத்துவ பயன்கள்

இது ஒரு சத்துள்ள உணவு. இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இது சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.


இது, நெய் சேர்த்து சமைப்பது நல்லது. சாதாரணமாக எல்லா வீட்டுக் கொல்லைகளிலும் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே கூற வேண்டும். எண்ணற்ற வியாதிகளுக்கு ஏன்?

அநேகமாக எந்த வியாதிக்குமே, பலவகைகளில் மருந்தாகிறது.
முருங்கை மரத்தை விதையிலிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் உற்பத்தி செய்யலாம்.


இதில் ஒட்டுச் செடிகூட உண்டு என்றால் உங்களுக்கு வியப்பாயிருக்கும். அந்த ஒட்டு வகையில் நல்ல சதைப்பற்றான சுவையான காய்கள் கிடைக்கும். நீண்ட காய்களை காய்க்கக் கூடியதாகவும் அதிக பலனை தரக்கூடியதாகவும் வளரும்.

முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்களுக்கும் போடுவது வழக்கம்.

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கி சிறு நீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் ஒரு நல்ல மருந்து.

முருங்கைக் காயை தென்னாட்டில் தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

வட நாட்டில் இதை அதிகமாகச் சமைத்து உண்பதைக் காண்போம்.

கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு தம்ளர் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவி செய்கிறது.

முருங்கை மரத்தின் மருந்து சக்தியை அறிந்தோ அறியாமலோ நாம் அடிக்கடி முருங்கைக்காயை உணவாகக் கொள்கிறோம். முருங்கைக்காய் சாம்பார் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்றே!

முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

மஞ்சளின் மகிமை

1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் பசியை உண்டாக்கும்.

2. மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல. மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான்.

3. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும்.

4. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள்.

5. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும்.

6. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும்.

7. மஞ்சள், வேப்பிலை உடன் சிறிது வசம்பும் சேர்த்து அரைத்து பூச, மேகப்படை, விஷக்கடிகள் வட்டமான படைகள் போகும்.

8. மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து, தடவ கால் வெடிப்பு குணமாகும்.

9. கஸ்தூரி மஞ்சளுடன், வெண்கடுகு சாம்பிராணி சேர்த்தரைத்து சுளுக்குகளுக்கு பற்று போட்டால் குணமாகும்.

10. மஞ்சள் சுட்ட சாம்பலுடன், ஊமத்தன் இலைச்சாறு குழைத்து பூச கட்டிகள் பழுத்து உடையும்.

11. மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து பூச சேற்றுபுண் போகும்.

12. மஞ்சள் சுட்ட சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூச, ஆறாத புண்கள் ஆறும்.

13. மஞ்சளுடன், சாம்பிராணி, ஏலம் சுக்கு சேர்த்தரைத்து தலையில் பற்றிட தலைவலி போகும்.

14. மஞ்சளுடன் சுண்ணாம்பு மூலிகையும் சேர்த்து மிகவும் பிரபலமான புத்தூர் (ஆந்திரா) எலும்பு முறிவுக்கு கட்டப்படுகிறது.

15. மஞ்சள் தூளுடன், சிறிது கற்பூரத்தூளை சேர்த்து, கை கால்கள் சில்லிட்தற்கு பூச சூடேறும்.

16. கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சமஅளவு அரைத்து பூச, முகப்பருக்கள் மறையும்.

17. பெண்கள் முக்கியமாக முகத்தில் மஞ்சளை பூசுவதற்குக் காரணம் முகத்தில் முடி வளருவதை தடுக்கிறது.


18. பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன் நிறம் பெறும்.

மனத்தக்காளி கீரை

1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும்.

2. வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.

3. இதயத்திற்கு வலிமை ஏற்றும்.

4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும்.

6. கண்பார்வையும் தெளிவு பெறும்.

7. வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்வுத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுப்பட்டு குணமாகும்.

8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து தொடர்ந்து சாப்பிட்டால், குடல் புண் மற்றும் மூத்திரப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

9. மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையை நீக்கும்.

10. கீரைப்பூச்சி போன்ற கிருமித்தொல்லை உடையவர்கள் வற்றலை உண்டுவர அவை வெளியேறும்.

11. மணத்தாக்காளிப் பழம் குரலை இனிமையாக்கும்.

12. கருப்பையில் கரு வலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் உதவுகிறது.

13. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

பனையின் மருத்துவப் பயன்கள்

பனம்பால் : பனை மரத்தின் பால் தெளிவு எனப்படும் சுண்ணாம்பு கலவாததுகள் எனப்படும். வைகறை விடியல் இந்த பாலை 100-200 மி.லி அருந்தி வந்தால் போதும் உடல் குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப்புண் நிச்சயம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும். அறிவை மயக்கும். ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான, சத்தான குடிநீராகும்.

நுங்கு : நுங்கு வெய்யிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீரை வேர்க்குருவிற்குத் தடவ குணம் கிடைக்கும்.

பழம் : பழம் சிறந்த சத்துணவாகும். உயிர்ச்சத்து நிறைந்தது, பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கிழங்கு : பனங்கிழங்கு மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளின் உடலைத் தேற்றும்.

பனையோலை :- பனையோலை வேய்ந்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது.

படை, தடிப்பு, ஊறல், சொறிக்கு பனை மரத்தைக் கொட்டினால் வரும் நீரைத் தடவினால் குணம் கிடைக்கும். ஐந்தாறு முறை தடவுங்கள்.

கேரட்

கறுப்பானவர்கள் மாநிறமாகலாம். . .
குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள். . .
செரிமானம் கூடும்
குடல் வலி குணமாகும் . . .
குடல் புழுக்கள் மறையும்
அது என்ன மருந்து என்று தானே யோசிக்கிறீர்கள்? இது மருந்து இல்லை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய் கேரட் தான்!

ஒரு 100 கிராம் கேரட்டில் 86.0 விழுக்காடு நீர்ச்சத்தும், 0.9 விழுக்காடு புரோட்டீன் சத்தும், 0.2 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 1.1 விழுக்காடு தாதுக்களும், 1.2 விழுக்காடு நார்ச்சத்தும், 10.6 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸும் உள்ளது.

கால்சியம் 80 மில்லி கிராமும் பாஸ்பரஸ் 530 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.2 மில்லி கிராமும் வைட்டமின் சி 3 மில்லிகிராமும் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி யும் உள்ளது.

கேரட் ஒரு காரத்தன்மை அதிகம் உள்ள கிழங்கு என்பதால் அமில உடல்வாகு உள்ளவர்கள் இதனை அதிகம் உண்ண அமில நிலை சமநிலை அடையும்.


கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களும் கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும், நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும்.
இந்த பச்சைக் கேரட் ஜூஸ் நம்முடைய குடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்தம் உற்பத்தியாகப் பயன்படுகிறது. பொதுவாக கேரட்டை வேகவைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிய நேரிடுகிறது. எனவே வேகவைத்த கேரட்டைவிட பச்சைக் கேரட் உண்ணுவதே சிறந்தது.

கருப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் அடிக்கடி அருந்த அவர்களின் நிறம் சிறிது மாறுவதுடன் தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும் செம்மைப்படும். நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை வெளியேற்றுவதுடன் ஈறுகள் பலப்பட்டு பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.


கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர நம் உணவுக் குழாய்களில் தோன்றும் நோய்களாகிய குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தினமும் வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடலில் வாழும் நூல் புழுக்கள் வெளியேறி விடும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மலட்டுத் தன்மை மறையும்.

கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.


கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ணீரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், துருவி மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து (நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது) ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து பருகலாம் அல்லது மிளகு சீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம்.

கேரட் சூப் வயிற்றோட்டத்திற்கு ஒரு சிறந்த மருந்து. 1/4 கிலோ கேரட்டை சுத்தம் செய்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்புச் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு இரண்டு ஸ்பூனாகக் குடிக்க வேண்டும். வயிற்றோட்டத்தின் மூலம் இழக்கப்பட்ட சோடியம், பொட்டாசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை இந்த கேரட் சூப் ஈடு செய்யும்.


இதன் நிறமும் சுவையும் அனைவரையும் தன் வசப்படுத்தும். பொதுவாகக் கேரட் எல்லா நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை கேரட் விளைச்சலை அதிகரிக்கும். கேரட் உடன் அதன் உச்சியில் இருக்கும் கேரட் கீரையும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அக்கீரையையும் சமைத்து உண்ணலாம்.

முருங்கையின் குணங்கள்

சாம்பார் என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் காய் முருங்கை காய். தென்னிந்தியக் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் வளர்க்கப்படும் மரம் முருங்கை மரமே. இதன் இலைகள், பூக்கள், காய்கள் என்று இதன் எல்லாப் பகுதிகளும் சமையலுக்குப் பயன்படுகின்றன. முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையில் அக்ரோடீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்.சி அதிகளவில் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் முருங்கைக் கீரையில் தண்ணீர் சத்து 75.9 விழுக்காடும், புரோட்டீன் 6.7 விழுக்காடும், கொழுப்புச் சத்து 1.7 விழுக்காடும், தாதுக்கள் 2.3 விழுக்காடும், நார்ச்சத்து 12.5 விழுக்காடும் உள்ளன. மற்றும் கால்சியம் முருங்கைக் கீரையில் மிக அதிகளவாக 440 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 70 மில்லி கிராமும், 220 மில்லி கிராமும் மற்றும் சிறிதளவு வைட்டமின்.பி சத்துக்களும் உள்ளன.

வளரும் குழந்தைகளுக்கு முருங்கை இலை சூப் ஒரு விலை மதிப்பில்லாத டானிக். தாமதமாக நடக்கும் குழந்தைகளுக்கும், நோயில் படுத்து நடக்க முடியாதவர்களுக்கும் இளம் முருங்கைக் கீரையை வேக வைத்து அந்தச் சூப்பைப் பாலுடன் கலந்து கொடுத்தால் எலும்புகள் உறுதியாவதுடன் இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்தமும் சுத்தமாகும்.

பாலுடன் கலந்த முருங்கைக் கீரைச் சூப்பை கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட அவர்களுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, விட்டமின்ஸ் ஆகியவை போதிய அளவு கிடைப்பதுடன் அவர்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்து குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை சார்ந்த நோய்களையும் நீக்கும். தண்ணீரில் சிறிது உப்புடன் முருங்கைக் கீரையை வேகவைத்து கிடைக்கும் சூப்பில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு அருந்த தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.


நெஞ்சகச் சளியின் பிரிவுகளான ஆஸ்துமா, பிராங்கைடிஸ் மற்றும் காச நோயினால் அவதிப்படுபவர்கள் முரங்கை இலையை பத்து நிமிடம் வேக வைத்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்பு, மிளகு, எலுமிச்சம் சாறு ஆகியவற்றினைக் கலந்து வாரத்திற்கு மூன்று நாள், நோய் சரியாகும் வரை சாப்பிட வேண்டும்.

ஊட்டச்சத்துக் குறைவினால் இல்வாழ்க்கையில் நாட்டமில்லாதவர்கள் (ஆண்களும் பெண்களும்) முருங்கைப் பூவைப் பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட அவர்கள் உணர்வில் விரும்பத்தக்க மாறுதல் ஏற்படும். முருங்கை மரக்கிளையின் பட்டையை வெயிலில் உலர்த்தி பின்னர் பொடி செய்து, இரண்டு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பவுடரைக் கலந்து கொதிக்க வைக்கவேண்டும். இத்தண்ணீர் ஒரு டம்ளராக கொதித்து வற்றியவுடன், வடிகட்டி குளிர்ந்த பின்பு அருந்த வேண்டும். இவ்வாறாக மூன்று மாதம் சாப்பிட ஆண்களுக்கு ஏற்படக் கூடிய விரைவில் விந்து வெளிப்படுதல் சரியாவதுடன் விந்தும் கெட்டிப்படும்.

முருங்கை இலைச் சூப்புடன் சிறிது தேன் விட்டுச் சாப்பிட வயிற்றோட்டம், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். முருங்கை இலை சூப், கேரட் ஜூஸ் இரண்டையும் கலந்து பருக சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாவதால் ஏற்படும் எரிச்சலுடன் கூடிய நீர்க்கடுப்பு சரியாகும்.

சனி, 6 ஜூன், 2009

பூண்டு

வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.


பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.
பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும்

உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.

நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.
பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.
நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

தண்ணீரின் மகிமை

நம்மில் பலருக்கும் தண்ணீரின் மகிமை தெரியாமலே உள்ளது. உடம்பின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், சில்லறை உபாதைகளை தீர்த்து வைக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதன் நன்மைகள் அநேகம்.

தண்ணீர் அருந்தாவிடில் உயிர் வாழ முடியாது எல்லோருக்கும் தெரிந்தது தான். தாகம் தணிப்பதற்கு மேலாகவே அது பலவிதத்திலும் பயன்படுகிறது.
ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நம் உடம்பில் சென்று சேர்கிற உணவு பிராண வாயு, ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல் (ஊநடட) கள் என்று பார்த்தால் அவை 83 சதவீதம் தண்ணீராகவே உள்ளது.

உணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும் தண்ணீர் அவசியமாகிறது.

உடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும் (வியர்வை, சிறுநீர் வடிவத்தில்) தண்ணீர் இருந்தால் தான் முடியும் உடம்பின் வெப்பநிலையை (கோடையிலும்) சீராக பராமரிக்க தண்ணீர்தான் அவசியம்.

போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில், எரிச்சல் என்று அனேக உபாதைகளை கொடுக்கும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு தசைச்சோர்வு ஏற்படவும் அவர்கள் திறமையை சரிவர வெளிக்காட்ட இயலாது போவதும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது தான். நாம் திரவபதார்த்தங்கள், பானங்கள் உட்கொள்கிறோம் என்பதற்காக ஒரேயடியாகவும் தண்ணீரை ஒதுக்கி விட முடியாது.

மற்ற குளிர்பானங்களைப் போல் தண்ணீரில் செயற்கை நிறமூட்டியோ, மண மூட்டியோ கிடையாது. காபி, டீயில் காஃபின் என்ற நச்சுப் பொருள் பற் சொத்தைக்கு காரணமாகசர்க்கரை எல்லாம் உண்டு.

தாகம் தணிக்க சிறந்தது எது? தண்ணீர் தான். உடற்பயிற்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, தண்ணீர் தான் உட்கொள்ள ஏற்றது. சில இன்சுவை பானங்கள் குடித்ததுமே தாகம் தணிவதாக உணர்கிறோம். உண்மையில், அந்த பானங்கள் நம் தசைகளிலுள்ள ஈரப் பசையை நீராக்கி குடல் வழி செலுத்துகிறது. இதனால் உள்ளுக்குள் வறட்சிதான் விளைகிறது. நோயாளிகள் திட உணவை அதிகம் எடுத்துக் கொள்ள முடியாது. திரவரூபமாக உட்கொள்வது எளிது. அத்திரவ உணவுகள் சத்துக்களோடு, நீர்த்தன்மையும் கொண்டவை என்பதும் சவுகரியம் இயல்பான உடல்நலம் உள்ளவர்கள் தம்மால் முடிந்த அளவு தண்ணீரை குடிக்கலாம் அதில் கொழுப்பு (கயவ) இல்லை .

நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பது அவரவர் உடலமைப்பு, உணவுப் பழக்கம், வேலை, வாழ்கிற சீதோஷ்ண நிலை போன்ற அநேக விஷயங்களை பொறுத்தது.

இந்தியா மாதிரி உஷ்ணப் பிரதேசத்தில் வசிக்கிறவர் உடம்பிலிருந்து நிறைய தண்ணீரை இழக்கிறார். ஈடு செய்ய வேண்டியவராகிறார். வாந்தி வயிற்றுப் போக்கின் போதும் நிறைய தண்ணீர் இழக்கப்படுகிறது.
சுமார் 60 கிலோ எடையுள்ள ஒருவர் பத்து க்ளாஸ், திரவ ரூபமாக உட்கொள்ள வேண்டும். (ஒரு வேளைக்கல்ல ஒரு நாளைக்கு) அதில் முக்கால் வாசி தண்ணீராக இருக்க வேண்டும்.

சிறுநீரின் நிறம் அடர்ந்து காணப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவை என்று புரிந்து கொள்ளலாம். சிறுநீரக சம்பந்தமான பழுது இருதய கல்லீரல் கோளாறுள்ளவர்கள் தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த உறுப்புகளின் அப்போதைய கழிவுகளை வெளியேற்றும் திறன் குறைந்திருக்கும்.

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட்

புற்றுநோய் பரவுவதை தடுக்கும். . .
மலச்சிக்கலைப் போக்கும். . .
பித்தத்தைக் குறைக்கும். . .
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். . .
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். ட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
ஒரு 100 கிராம் பீட்ரூட்டில்


தண்ணீர் 87.7 விழுக்காடும்;
புரோட்டின் 1.7 விழுக்காடும்;
கொழுப்பு 0.1 விழுக்காடும்;
தாதுக்கள் 0.8 விழுக்காடும்;
நார்ச்சத்து 0.9 விழுக்காடும்;
கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது.
மற்றும்
கால்சியம் 18 மில்லி கிராமும்,
பாஸ்பரஸ் 55 மில்லிகிராமும்,
இரும்பு 1.0 மில்லிகிராமும்,
வைட்டமின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி
ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படுபவர்களும் மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும்.
ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.


வேம்பு - மருத்துவ குணங்கள்

1. வேப்பம்பட்டை விட்டு விட்டு வருகிற ஜீரத்திற்கு உதவுகிறது.
2. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் குணமிருப்பதால் குஷ்ட நோய்க்குக் கொடுக்கப்படுகிறது.
3. வயிற்றில் பூச்சித் தொந்தரவு உள்ளவர்களுக்கு இளந்தளிர்களை உப்புடனும் மிளகுடனும் அரைத்துக் கொடுக்கப்படுகிறது.
4. காமாலை நோய்க்கு வேப்பிலைச் சாற்றைத் தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.
5. புண்களைச் சுத்தம் பட்டைக் கஷாயம் பயன்படுகிறது.
6. வேப்பிலையும், மஞ்சளையும் சேர்த்தரைத்து பற்றை அம்மைப் புண்களில் மருந்தாகப் பூசப்படுகிறது.
7. வேப்பெண்ணெய் புண்களை அகற்றுவதற்காக மேலே பூசப்படும்.
8. புத்தகங்களை அரிக்கும் பூச்சிகளை அகற்றுவதற்கு நூல் நிலையங்களில் வேப்பிலை பயன்படுகிறது.
9. வேப்பம்பூ, வாந்தி, ஏப்பம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்.
10. வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து சரும வியாதியுள்ளவர்களுக்கு கொடுத்து வந்தால் நோய் தீரும்.

வெள்ளி, 5 ஜூன், 2009

புதினாக் கீரைபுதினாக்கீரையை துகையல் அரைப்பது தான் வழக்கம்.

அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக . . .

சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது.
புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.

கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த கருத்தரிக்க இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும்.

சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.

புதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை ¾ கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது.

ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.

20 கிராம் எடையுள்ள புதினாக்கீரையில்
வைட்டமின் ஹ உயிர்ச்சத்தும் 787 மில்லிகிராம்
வைட்டமின் க்ஷ1 உயிர்ச்சத்தும் 14 மில்லிகிராமும்,
வைட்டமின் க்ஷ2 உயிர்ச்த்து 23 மில்லிகிராம் அளவும்,
இரும்புச் சத்து 4.4 மில்லிகிராமும்,
சுண்ணாம்புச் சத்து 57 மில்லிகிராமும்
இருக்கிறது.
இதன் காலரி என்னும் உஷ்ண அளவு 16 ஆகும்.

புதினாக்கீரை பெரும்பாலும் ரச கற்பூரம் (ஆநவோடிட) தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது.

புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.

புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும்.
புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும்.
தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.

புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது. இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.
புதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும். தகர டப்பா கூடாது

வியாழன், 4 ஜூன், 2009

தேன் - மருத்துவ பயன்கள்

1. மலச்சிக்கலைப் போக்கும்.
2. குழந்தைகள் தினந்தோறும் அருந்தினால் கால்சியம், மக்னீஷியம் அளவு அதிகமாகி நல்ல வலிவைத் தரும்.
3. பாலுடன் கலந்து கொடுத்தால் இரத்தத்தில் `ஹீமோகுளோபின்' அளவு அதிகமாகும்.
4. தினமும் படுக்கைக்குப் போகும் முன்பு ஒரு தேக்கரண்டி தேனை கொடுத்து வந்தால், தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குணமாகி விடும்.
5. அரை எலுமிச்சை பழச்சாறும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் எல்லாவித அலர்ஜி வியாதிகளும் குணமடையும்.
6. இரைப்பை, குடல் புண்களை தேன் குணப்படுத்தும்.
7. தேன் விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கும்.
8. வயதானவர்களுக்கு ஏற்படும் தசைகளில் வலி, கால்கள், பாதங்களில் பிடிப்பு, முதலியன தேனை அருந்துவதால் நீங்குகிறது.
9. காலை இரவு தேனை 4 கரண்டி அருந்தி வந்தால் உடல் பருமண், வலிவு குறையாமல் இளைக்கும்.
10. தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.
11. தேன் கோழையை அகற்றும்.