பனம்பால் : பனை மரத்தின் பால் தெளிவு எனப்படும் சுண்ணாம்பு கலவாததுகள் எனப்படும். வைகறை விடியல் இந்த பாலை 100-200 மி.லி அருந்தி வந்தால் போதும் உடல் குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப்புண் நிச்சயம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும். அறிவை மயக்கும். ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான, சத்தான குடிநீராகும்.
நுங்கு : நுங்கு வெய்யிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீரை வேர்க்குருவிற்குத் தடவ குணம் கிடைக்கும்.
பழம் : பழம் சிறந்த சத்துணவாகும். உயிர்ச்சத்து நிறைந்தது, பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கிழங்கு : பனங்கிழங்கு மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளின் உடலைத் தேற்றும்.
பனையோலை :- பனையோலை வேய்ந்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது.
படை, தடிப்பு, ஊறல், சொறிக்கு பனை மரத்தைக் கொட்டினால் வரும் நீரைத் தடவினால் குணம் கிடைக்கும். ஐந்தாறு முறை தடவுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக