சனி, 6 ஜூன், 2009

தண்ணீரின் மகிமை

நம்மில் பலருக்கும் தண்ணீரின் மகிமை தெரியாமலே உள்ளது. உடம்பின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், சில்லறை உபாதைகளை தீர்த்து வைக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதன் நன்மைகள் அநேகம்.

தண்ணீர் அருந்தாவிடில் உயிர் வாழ முடியாது எல்லோருக்கும் தெரிந்தது தான். தாகம் தணிப்பதற்கு மேலாகவே அது பலவிதத்திலும் பயன்படுகிறது.
ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நம் உடம்பில் சென்று சேர்கிற உணவு பிராண வாயு, ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல் (ஊநடட) கள் என்று பார்த்தால் அவை 83 சதவீதம் தண்ணீராகவே உள்ளது.

உணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும் தண்ணீர் அவசியமாகிறது.

உடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும் (வியர்வை, சிறுநீர் வடிவத்தில்) தண்ணீர் இருந்தால் தான் முடியும் உடம்பின் வெப்பநிலையை (கோடையிலும்) சீராக பராமரிக்க தண்ணீர்தான் அவசியம்.

போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில், எரிச்சல் என்று அனேக உபாதைகளை கொடுக்கும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு தசைச்சோர்வு ஏற்படவும் அவர்கள் திறமையை சரிவர வெளிக்காட்ட இயலாது போவதும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது தான். நாம் திரவபதார்த்தங்கள், பானங்கள் உட்கொள்கிறோம் என்பதற்காக ஒரேயடியாகவும் தண்ணீரை ஒதுக்கி விட முடியாது.

மற்ற குளிர்பானங்களைப் போல் தண்ணீரில் செயற்கை நிறமூட்டியோ, மண மூட்டியோ கிடையாது. காபி, டீயில் காஃபின் என்ற நச்சுப் பொருள் பற் சொத்தைக்கு காரணமாகசர்க்கரை எல்லாம் உண்டு.

தாகம் தணிக்க சிறந்தது எது? தண்ணீர் தான். உடற்பயிற்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, தண்ணீர் தான் உட்கொள்ள ஏற்றது. சில இன்சுவை பானங்கள் குடித்ததுமே தாகம் தணிவதாக உணர்கிறோம். உண்மையில், அந்த பானங்கள் நம் தசைகளிலுள்ள ஈரப் பசையை நீராக்கி குடல் வழி செலுத்துகிறது. இதனால் உள்ளுக்குள் வறட்சிதான் விளைகிறது. நோயாளிகள் திட உணவை அதிகம் எடுத்துக் கொள்ள முடியாது. திரவரூபமாக உட்கொள்வது எளிது. அத்திரவ உணவுகள் சத்துக்களோடு, நீர்த்தன்மையும் கொண்டவை என்பதும் சவுகரியம் இயல்பான உடல்நலம் உள்ளவர்கள் தம்மால் முடிந்த அளவு தண்ணீரை குடிக்கலாம் அதில் கொழுப்பு (கயவ) இல்லை .

நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பது அவரவர் உடலமைப்பு, உணவுப் பழக்கம், வேலை, வாழ்கிற சீதோஷ்ண நிலை போன்ற அநேக விஷயங்களை பொறுத்தது.

இந்தியா மாதிரி உஷ்ணப் பிரதேசத்தில் வசிக்கிறவர் உடம்பிலிருந்து நிறைய தண்ணீரை இழக்கிறார். ஈடு செய்ய வேண்டியவராகிறார். வாந்தி வயிற்றுப் போக்கின் போதும் நிறைய தண்ணீர் இழக்கப்படுகிறது.
சுமார் 60 கிலோ எடையுள்ள ஒருவர் பத்து க்ளாஸ், திரவ ரூபமாக உட்கொள்ள வேண்டும். (ஒரு வேளைக்கல்ல ஒரு நாளைக்கு) அதில் முக்கால் வாசி தண்ணீராக இருக்க வேண்டும்.

சிறுநீரின் நிறம் அடர்ந்து காணப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவை என்று புரிந்து கொள்ளலாம். சிறுநீரக சம்பந்தமான பழுது இருதய கல்லீரல் கோளாறுள்ளவர்கள் தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த உறுப்புகளின் அப்போதைய கழிவுகளை வெளியேற்றும் திறன் குறைந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக