சனி, 26 டிசம்பர், 2015

முருங்கை

• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு

திங்கள், 15 ஜூன், 2015

இந்தியாவைப் பொறுத்தவரை இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதை தடுக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய இயற்கை வைத்தியத்தைக் காண்போம் இங்கே...
1. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து... சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
2. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒ-ரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலுவூட்டும்!
3. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்.
4.இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்

திங்கள், 27 ஏப்ரல், 2015

சளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்!

*இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாக ஆகாயத் தாமரை
*ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும்.
*ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.
*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட் டால் சளித் தொல்லை தீரும்.
*ஆகாயத் தாமரை இலைச்சாறுடன் பன்னீர், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாகும்.
*அவரை இலைச்சாறை துணி யில் நனைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலை வலி, தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் சரியாகும்.
*ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ் ஆகியவை சரியாகும்.
*அதிமதுரம், ஆடாதொடை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
*அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குணமாகும்.
அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.