புதன், 10 டிசம்பர், 2014

தொப்பையை குறைக்க எளிய வழிகள்

தொப்பை உள்ள ஒவ்வொரு மனிதனும் தொப்பையை குறைக்க பல வழிகளில் முயற்ச்சிகளை எடுத்துக்கொண்டுதான் வருகிறான். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும்.
உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், சரியான உணவுகள் கண்டிப்பாக தேவை. அவைகள் உங்கள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும், உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும். இதனால் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும்.
கொழுப்புகளை எரிக்க உதவும் உணவுகள் பல உள்ளது. அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் பத்தே நாட்களில் தொப்பையை குறைத்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை ஜூஸ் :
காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் எலுமிச்சை ஜூஸ்சை தயார் செய்து  வெறும் வயிற்றில் பருக வேண்டும். தினமும் காலை இதனை பருகிய பிறகு, 30 நிமிடங்களுக்கு வரை எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது.
மீன் எண்ணெய் :
மீனில் ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அடங்கியுள்ளது. ஐகோசாபென்டேயினாய்க் அமிலம், டொக்கோஸாஹெக்ஸாயனிக் அமிலம் மற்றும் லினோலெனிக் அமிலம் போன்ற ஒமேகா 3 அமிலங்கள் கொழுப்புகளை உடைத்து, வயிற்று பகுதியை சுற்றியுள்ள கொழுப்பு தேக்கத்தை குறைக்க உதவும்.
உங்களால் மீன் எண்ணெய்யை பயன்படுத்த முடியவில்லை என்றால், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள மீனை உண்ணுங்கள்.
சியா விதைகள் :
நீங்கள் சைவ உணவை மட்டும் உண்ணக்கூடியவராக இருந்தால் மீன் இல்லாமல் ஒமேகா-3 கொழுப்பமிலங்களைப் பெறுவதற்கு கொழுப்பமிலங்கள் அதிக அளவில் உள்ள சியா விதைகளைப் பயன்படுத்தலாம்.
இருப்பினும் இந்த விதைகளில் உள்ள ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தை DHA அல்லது EPA-வாக மாற்ற, சற்று அதிகமாக பாடுபட வேண்டும். ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போக, சியா விதைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கால்சியம், இரும்பு மற்றும் டையட்டரி நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.
இவைகள் உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். 4-8 டீஸ்பூன்  சியா விதைகளை பகல் நேரத்தில் உட்கொண்டால், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கும். இருப்பினும் 1 டீஸ்பூன் சியா விதைகளை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.
இஞ்சி டீ :
இஞ்சி என்பது இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவி செய்யும் பொருள். இஞ்சி வெப்ப ஆக்கம் கொண்டது. உடலின் வெப்பநிலையை அதிகரித்து கொழுப்பை சிறந்த முறையில் எரிக்க உதவிடும்.
அதிகமாக உண்ணுதல், வயது சம்பந்தப்பட்ட ஹார்மோன் குறைபாடு, உடற்பயிற்சி செய்யாதது மற்றும் மன அழுத்தம் போன்ற சில பிரச்சனைகளால் தான் வயிற்றில் கொழுப்பு தேங்குகிறது.
இந்த பிரச்சனைகள் அனைத்தையும் இஞ்சி நீக்கும்.
பூண்டு :
ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் பூண்டு உதவுவதால், அது நம் இதயகுழலிய அமைப்பிற்கு நல்லது என நமக்கு தெரிந்திருக்கும்.
இதனோடு சேர்த்து, பூண்டில் உடல் பருமன் எதிர்ப்பு குணங்களும் அடங்கியுள்ளது. அதனால் பூண்டை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதாகும். இருப்பினும் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க பூண்டை பச்சையாக பயன்படுத்துவது தான் அதிக பயனை தரும்.
மூலிகைகள் :
மூலிகைகள் என்று தெரியாமலேயே உங்கள் சமையலறையில் பல மூலிகைகள் இருக்கும். அதனை உங்கள் தினசரி சமையலில் அல்லது சாலட் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தி தான் வருகிறோம்.
ஆனால் நம் உடலின் கொழுப்பின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நமக்கு தெரிவதில்லை. இஞ்சி, புதினா மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகள் எல்லாம் அதற்கு சில உதாரணங்கள் ஆகும்.
இந்த மூலிகைகளை கொழுப்பை எரிக்க உதவும் எலுமிச்சையுடன் சேர்த்து உட்கொண்டால், அது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் மாயத்தை நிகழ்த்தும்.
அதற்கு தண்ணீருடன் சிறிது வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனைப் பருக வேண்டும்.
லவங்கப்பட்டை :
லவங்கப்பட்டையின் இனிப்பு சுவையை தவறாக எண்ணி விடாதீர்கள். அது உங்கள் கொழுப்பை அதிகரிக்காது. சொல்லப்போனால் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பையும் சேர்த்து, உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பை குறைக்கவும் லவங்கப்பட்டை உதவுகிறது.
லவங்கப்பட்டை என்பதும் ஒரு வெப்ப ஆக்கமாகும். அதாவது மெட்டபாலிக் தூண்டல் மூலமாக வெப்பத்தை உருவாக்கும் லவங்கப்பட்டை. இதனால் உங்கள் கொழுப்பை எரிக்க லவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உங்கள் தினசரி உணவில் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொழுப்பற்ற இறைச்சி :
வெப்ப ஆக்க குணங்களை கொண்டுள்ள உணவுகளை உட்கொண்டால், உங்கள் கலோரிகளை எரிக்க அது உதவிடும்.
புரதத்தில் வெப்ப ஆக்க குணம் அதிகமாக இருக்கிறது. அதனால் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உணவாக விளங்குகிறது கொழுப்பில்லா இறைச்சி.
கொழுப்பில்லா இறைச்சியை உண்ணும் போது, அது செரிமானமாகும் போதே, அதிலுள்ள கலோரிகளில் 30 சதவீதத்தை அது எரித்துவிடும்.
இது கோழி, மாட்டிறைச்சி அல்லது பன்றிறைச்சியாக இருக்கலாம். இவைகளை குறிப்பாக உங்கள் இரவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் உடலின் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும் நேரத்தில் செரிமானம் மூலம் உட்கொண்ட கலோரிகளை எரிக்கலாம். கொழுப்பில்லா இறைச்சியை வறுக்கவோ பொரிக்கவோ வேண்டாம்.
கிரீன் டீ :
தினமும் 4 கப் கிரீன் டீ குடித்தவர்களுக்கு, 8 வார கால கட்டத்தில் 6 பவுண்ட் அளவிலான எடை குறைந்தது என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
கிரீன் டீயில் எபிகாலோகேட்சின்-3-காலேட் (EGCG) என அழைக்கப்படும் கேட்சின் வகை ஒன்று உள்ளது. பல வித சிகிச்சை முறைகளை கொண்டுள்ள இயற்கையான ஃபெனால் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டாக இது விளங்குகிறது.
கிரீன் டீ குடிக்கும் போது, அதிலுள்ள ECGC உங்கள் மெட்டபாலிசத்தை ஊக்குவித்திடும்.
தினமும் 3-4 கப் கிரீன் டீ குடியுங்கள். ஒவ்வொரு முறையும் அதனை நற்பதத்துடன் தயாரித்து கொள்ளுங்கள். குளிர்ந்த கிரீன் டீ வேண்டுமானால் அதனை குளிர் சாதன பெட்டியில் வைத்து குடித்திடவும்.
தூக்கம் :
வயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குவது தூக்கமின்மை. நீங்கள் தூங்காமல் இருக்கும் போது, இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை உட்கொள்ள நீங்கள் தூண்டப்படுவீர்கள்.
உங்கள் கார்டிசோல் ஹார்மோனையும் இது அதிகரிக்கச் செய்யும். இதனால் இன்சுலினுக்கு நீங்கள் உணர்சியற்றவராக மாறி விடுவீர்கள். இதன் காரணமாக உங்கள் உடலின் பயோ-ரிதமை நீங்கள் இழப்பீர்கள். அதனால் நன்றாக தூங்குங்கள்.
குடிப்பழக்கம் :
மதுபானம் குடிப்பதை குறைக்கவும் அல்லது நிறுத்தவும். மதுபானம் முழுவதும் கலோரிகளால் நிறைந்துள்ளது. ஆனாலும் அதனை பருகும் போது வயிறு நிறைவதில்லை.
அளவுக்கு அதிகமாக பருகும் போது உங்கள் வயிற்றை சுற்றி கொழுப்பு தேங்கிவிடும். அதனால் மதுபானம் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

ஆனாலும் உங்களால் அதை பருகாமல் இருக்க முடியவில்லை என்றால் குடிக்கும் அளவையாவது குறைத்துக் கொள்ளுங்கள்.

சனி, 7 ஜூன், 2014

உருளைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு. இத்தகைய உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. உருளைக்கிழங்கு இல்லாத காய்கறியை நினைத்துப் பார்க்க முடிகிறதா? முடியாதல்லவா... உருளைக்கிழங்கு இல்லாத சமையலறையே இருக்காது. சொலானம் ட்யூபரோசம் என்ற விஞ்ஞான பெயரைக் கொண்ட இக்கிழங்கு ஒரு சீரான உருவமே இல்லாமல் அழகற்றதாக இருக்கும். இப்படி இருந்தும் அதனை ஈர்க்கும் பொருட்டு நம் மீது ஏதோ மந்திரத்தை இது தூவியிருக்க வேண்டும். உருளைக்கிழங்கு விரும்புபவர்களுக்கும் சரி, அதை விரும்பாதவர்களும் சரி, அதனை சமமான அளவு நேசித்தே ஆக வேண்டும். ஏனென்றால் வெறும் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் தவிர, அதிலிருந்து அவிழ்க்கப்பட வேண்டிய ரகசியங்கள் மேலும் உள்ளன. இத்தகைய இரகசியங்கள் என்னவென்று பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்பு அதில் உள்ள தீமைகளையும் அனைவரும் அறிந்ததாக வேண்டும். அது என்னவென்றால், உருளைக்கிழங்கு உண்ணுவதில் சிறு அச்சமும் இருக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடையது. அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அதில் ஓலனைன், சாக்கோனைன் மற்றும் ஆர்செனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால், இவை அதிக அளவு உடலினுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும். சரி, இப்போது அதன் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போமா!!!

எடை கூடுதல்
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

செரிமானம் 
கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவாய் விளங்குகிறது.

சரும பாதுகாப்பு
 வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

கீழ்வாதம் 
இங்கு இதை இரண்டு கோணங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், இது கீழ்வாதம் நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நிவாரணியாக இருக்கிறது. அனால் இதில் ஒரு சங்கடமும் உண்டு. ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் அளவு உருளைக்கிழங்கில் அதிகளவு இருப்பதால், பொதுவாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். இதுவே கீழ்வாதம் உள்ளவர்களுக்கோ கேடாக போய் முடியவும் வாய்ப்புள்ளது. 

அழற்சி/வீக்கம் 
உட்புற மற்றும் வெளிப்புற வீக்கம் மற்றும் அழற்சிக்கு ஏற்ற மருந்தாக விளங்குகிறது உருளைக்கிழங்கு. இது மிகவும் மென்மையாக, எளிதில் செரிமானம் செய்யக்கூடியதாக இருக்கும். மேலும் இதனுள் அதிகமாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால், குடல்களில் மற்றும் செரிமானம் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் அழற்சியை சரி செய்யும்.

வாய் புண்
வாய் புண் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும்

மூளை செயல்பாடு 
மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன் வரத்து, வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உருளைக்கிழங்கு மேற்கூறிய அனைத்தையும் தருவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

இதய நோய்கள்
உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளன. இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது. இருப்பினும் இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கூட்டுவதாலும், இதை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன் அதிகரித்து விடும். இதனால் இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படும். எனவே மிகவும் குண்டாக இருப்பவருக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உகந்த உணவு அல்ல.

வயிற்றுப் போக்கு 
வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும். ஏனென்றால் இதில் சுலபமாக செரிமானமாகிவிடும் ஆற்றல் இருக்கிறது. இருப்பினும் இதை அதிகமாக உட்கொண்டால் அதிக அளவு ஸ்டார்ச் உடலின் உள்ளே செல்லுவதால் வயிற்றுப்போக்கு அதிகரிக்கச் செய்யும்.

எரிகாயம்
உருளைக்கிழங்கின் சாறை, எரிகாயம், சிராய்ப்புகள், சுளுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம்

சனி, 1 மார்ச், 2014

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பருப்புகள்:-

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். 

மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மட்டுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல், பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன. 

அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒன்று எது என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம். 

மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப் 2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் வகைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம். 

துவரம் பருப்பு.......... துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடல் இயக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம். 

பாசிப்பருப்பு........... பாசிப்பருப்பில் வைட்டமின் `ஏ, பி, சி, ஈ' மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். 

பச்சை பயறு............ இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், `பி' காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமான மடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும் 

கொண்டைக் கடலை......... கொண்டைக் கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும். 

மைசூர் பருப்பு........... மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும். 

சுண்டல்...... கொண்டைக் கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு........... கடலைப் பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இருதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப் ட்டுள்ளது. 

சிவப்பு காராமணி............ சிவப்பு காராமணியில் `பி' காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. 

ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. 

தட்டை பயறு...... தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும். 

உளுத்தம் பருப்பு...... இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்று