திங்கள், 26 ஜனவரி, 2015

அமிர்தப்பொடி..!

(இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)

தேவையானவை: தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், நொறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.

செய்முறை:
கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவைத்துக்கொள்ளவும். வெயிலில் காயவைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்துவைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் புளி உப்பு பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.

மருத்துவப் பலன்கள்:
நோயிலிருந்து மீண்ட பிறகு, ஏற்படும் பசி மந்தத்தைப் போக்கும். எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னை இருந்தாலும், அதைப் போக்கி உடலைத் தெம்பாக்கும். குழந்தைகளுக்குப் பசியின்மை இருந்தால், சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து தரலாம்.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

சௌ சௌ...!

ரத்த அழுத்தம்,.நரம்பு தளர்ச்சியை நீக்கி சக்தியை அளிக்கும் சௌ சௌ...!
நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

100 கிராம் சௌசௌவில்
17.8% கார்போஹைட்ரேட்,
10.7% ஸ்டார்ச்,
10.5% போலேட் சத்து,
5.4% புரதசத்து,
6.7% சுண்ணாம்பு சத்து,
4.8% பாஸ்பரஸ்,
9% மாங்கனீசு கொண்டுள்ளது.


உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.
வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு..
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும்.
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது..
சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலை படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி விடும்.
புற்றுநோயை தடுக்க: சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்..
தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.
சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.
கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.

புதன், 10 டிசம்பர், 2014

தொப்பையை குறைக்க எளிய வழிகள்

தொப்பை உள்ள ஒவ்வொரு மனிதனும் தொப்பையை குறைக்க பல வழிகளில் முயற்ச்சிகளை எடுத்துக்கொண்டுதான் வருகிறான். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும்.
உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், சரியான உணவுகள் கண்டிப்பாக தேவை. அவைகள் உங்கள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும், உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும். இதனால் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும்.
கொழுப்புகளை எரிக்க உதவும் உணவுகள் பல உள்ளது. அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் பத்தே நாட்களில் தொப்பையை குறைத்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை ஜூஸ் :
காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் எலுமிச்சை ஜூஸ்சை தயார் செய்து  வெறும் வயிற்றில் பருக வேண்டும். தினமும் காலை இதனை பருகிய பிறகு, 30 நிமிடங்களுக்கு வரை எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது.
மீன் எண்ணெய் :
மீனில் ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் அடங்கியுள்ளது. ஐகோசாபென்டேயினாய்க் அமிலம், டொக்கோஸாஹெக்ஸாயனிக் அமிலம் மற்றும் லினோலெனிக் அமிலம் போன்ற ஒமேகா 3 அமிலங்கள் கொழுப்புகளை உடைத்து, வயிற்று பகுதியை சுற்றியுள்ள கொழுப்பு தேக்கத்தை குறைக்க உதவும்.
உங்களால் மீன் எண்ணெய்யை பயன்படுத்த முடியவில்லை என்றால், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள மீனை உண்ணுங்கள்.
சியா விதைகள் :
நீங்கள் சைவ உணவை மட்டும் உண்ணக்கூடியவராக இருந்தால் மீன் இல்லாமல் ஒமேகா-3 கொழுப்பமிலங்களைப் பெறுவதற்கு கொழுப்பமிலங்கள் அதிக அளவில் உள்ள சியா விதைகளைப் பயன்படுத்தலாம்.
இருப்பினும் இந்த விதைகளில் உள்ள ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தை DHA அல்லது EPA-வாக மாற்ற, சற்று அதிகமாக பாடுபட வேண்டும். ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போக, சியா விதைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கால்சியம், இரும்பு மற்றும் டையட்டரி நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது.
இவைகள் உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். 4-8 டீஸ்பூன்  சியா விதைகளை பகல் நேரத்தில் உட்கொண்டால், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கும். இருப்பினும் 1 டீஸ்பூன் சியா விதைகளை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.
இஞ்சி டீ :
இஞ்சி என்பது இயற்கையாகவே செரிமானத்திற்கு உதவி செய்யும் பொருள். இஞ்சி வெப்ப ஆக்கம் கொண்டது. உடலின் வெப்பநிலையை அதிகரித்து கொழுப்பை சிறந்த முறையில் எரிக்க உதவிடும்.
அதிகமாக உண்ணுதல், வயது சம்பந்தப்பட்ட ஹார்மோன் குறைபாடு, உடற்பயிற்சி செய்யாதது மற்றும் மன அழுத்தம் போன்ற சில பிரச்சனைகளால் தான் வயிற்றில் கொழுப்பு தேங்குகிறது.
இந்த பிரச்சனைகள் அனைத்தையும் இஞ்சி நீக்கும்.
பூண்டு :
ட்ரைகிளிசரைடுகளை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் பூண்டு உதவுவதால், அது நம் இதயகுழலிய அமைப்பிற்கு நல்லது என நமக்கு தெரிந்திருக்கும்.
இதனோடு சேர்த்து, பூண்டில் உடல் பருமன் எதிர்ப்பு குணங்களும் அடங்கியுள்ளது. அதனால் பூண்டை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதாகும். இருப்பினும் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க பூண்டை பச்சையாக பயன்படுத்துவது தான் அதிக பயனை தரும்.
மூலிகைகள் :
மூலிகைகள் என்று தெரியாமலேயே உங்கள் சமையலறையில் பல மூலிகைகள் இருக்கும். அதனை உங்கள் தினசரி சமையலில் அல்லது சாலட் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தி தான் வருகிறோம்.
ஆனால் நம் உடலின் கொழுப்பின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் நமக்கு தெரிவதில்லை. இஞ்சி, புதினா மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகள் எல்லாம் அதற்கு சில உதாரணங்கள் ஆகும்.
இந்த மூலிகைகளை கொழுப்பை எரிக்க உதவும் எலுமிச்சையுடன் சேர்த்து உட்கொண்டால், அது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்கும் மாயத்தை நிகழ்த்தும்.
அதற்கு தண்ணீருடன் சிறிது வெள்ளரிக்காய், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகள் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனைப் பருக வேண்டும்.
லவங்கப்பட்டை :
லவங்கப்பட்டையின் இனிப்பு சுவையை தவறாக எண்ணி விடாதீர்கள். அது உங்கள் கொழுப்பை அதிகரிக்காது. சொல்லப்போனால் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பையும் சேர்த்து, உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பை குறைக்கவும் லவங்கப்பட்டை உதவுகிறது.
லவங்கப்பட்டை என்பதும் ஒரு வெப்ப ஆக்கமாகும். அதாவது மெட்டபாலிக் தூண்டல் மூலமாக வெப்பத்தை உருவாக்கும் லவங்கப்பட்டை. இதனால் உங்கள் கொழுப்பை எரிக்க லவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உங்கள் தினசரி உணவில் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொழுப்பற்ற இறைச்சி :
வெப்ப ஆக்க குணங்களை கொண்டுள்ள உணவுகளை உட்கொண்டால், உங்கள் கலோரிகளை எரிக்க அது உதவிடும்.
புரதத்தில் வெப்ப ஆக்க குணம் அதிகமாக இருக்கிறது. அதனால் கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த உணவாக விளங்குகிறது கொழுப்பில்லா இறைச்சி.
கொழுப்பில்லா இறைச்சியை உண்ணும் போது, அது செரிமானமாகும் போதே, அதிலுள்ள கலோரிகளில் 30 சதவீதத்தை அது எரித்துவிடும்.
இது கோழி, மாட்டிறைச்சி அல்லது பன்றிறைச்சியாக இருக்கலாம். இவைகளை குறிப்பாக உங்கள் இரவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் உடலின் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும் நேரத்தில் செரிமானம் மூலம் உட்கொண்ட கலோரிகளை எரிக்கலாம். கொழுப்பில்லா இறைச்சியை வறுக்கவோ பொரிக்கவோ வேண்டாம்.
கிரீன் டீ :
தினமும் 4 கப் கிரீன் டீ குடித்தவர்களுக்கு, 8 வார கால கட்டத்தில் 6 பவுண்ட் அளவிலான எடை குறைந்தது என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
கிரீன் டீயில் எபிகாலோகேட்சின்-3-காலேட் (EGCG) என அழைக்கப்படும் கேட்சின் வகை ஒன்று உள்ளது. பல வித சிகிச்சை முறைகளை கொண்டுள்ள இயற்கையான ஃபெனால் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டாக இது விளங்குகிறது.
கிரீன் டீ குடிக்கும் போது, அதிலுள்ள ECGC உங்கள் மெட்டபாலிசத்தை ஊக்குவித்திடும்.
தினமும் 3-4 கப் கிரீன் டீ குடியுங்கள். ஒவ்வொரு முறையும் அதனை நற்பதத்துடன் தயாரித்து கொள்ளுங்கள். குளிர்ந்த கிரீன் டீ வேண்டுமானால் அதனை குளிர் சாதன பெட்டியில் வைத்து குடித்திடவும்.
தூக்கம் :
வயிற்றில் கொழுப்பு தேங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குவது தூக்கமின்மை. நீங்கள் தூங்காமல் இருக்கும் போது, இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை உட்கொள்ள நீங்கள் தூண்டப்படுவீர்கள்.
உங்கள் கார்டிசோல் ஹார்மோனையும் இது அதிகரிக்கச் செய்யும். இதனால் இன்சுலினுக்கு நீங்கள் உணர்சியற்றவராக மாறி விடுவீர்கள். இதன் காரணமாக உங்கள் உடலின் பயோ-ரிதமை நீங்கள் இழப்பீர்கள். அதனால் நன்றாக தூங்குங்கள்.
குடிப்பழக்கம் :
மதுபானம் குடிப்பதை குறைக்கவும் அல்லது நிறுத்தவும். மதுபானம் முழுவதும் கலோரிகளால் நிறைந்துள்ளது. ஆனாலும் அதனை பருகும் போது வயிறு நிறைவதில்லை.
அளவுக்கு அதிகமாக பருகும் போது உங்கள் வயிற்றை சுற்றி கொழுப்பு தேங்கிவிடும். அதனால் மதுபானம் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

ஆனாலும் உங்களால் அதை பருகாமல் இருக்க முடியவில்லை என்றால் குடிக்கும் அளவையாவது குறைத்துக் கொள்ளுங்கள்.