வியாழன், 22 செப்டம்பர், 2011

இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்


எப்போதும்  இளமையாக  இருக்க  உணவு  விஷயத்தில் உக்களுக்கு  உதவும்  21  குறிப்புகள்  இங்கே ......

  • தினசரி  ஒரு  கைப்பிடியளவுக்கு  பாதாம் பருப்பு,  வேர்க்கடலை  போன்ற  கொட்டை   வகைகளைச்  சாப்பிடுங்கள்.  இதை  சாப்பிட்டால்  இதய நோய்  அபாயம்  வெகுவாக  குறையும்.   ஆயுளில்  3   ஆண்டுகளை  அதிகரிக்கும்  என்கிறார்கள்  அமெரிக்க  ஆராய்ச்சியாளர்கள்,  இதயத்துக்கு  ஆரோக்கியமளிக்கும்   நல்ல  கொழுப்பு,  ஒட்டுமொத்த   நலனை  காக்கும்  'செலினியம்'  ஆகியவை  கொட்டை வகை  உணவுகளின்  சொத்து.
  • உங்கள்  உணவில்  வாரத்தில்  2   முறை  மீன்  இருக்கட்டும்.  இரண்டில்  ஒன்று  எண்ணெய்  மீனாக  இருந்தால்  நல்லது.  கொலஸ்ட்ராலை  குறைத்து,  இருதய  நோய்  அபாயத்தைக்  கட்டுப்படுத்தக்கூடிய  'ஒமேகா  3  பேட்டி  ஆசிட்',   எண்ணை  செறிந்த  மீன்களில்  அதிகம்  உள்ளது.
  • சாப்பாடுகளுக்கு இடையே  3   மணிநேர  இடைவெளி  அவசியம்.  மூன்று  பிரதான  உணவுகளில்  காலை  உணவை  முழுமையாக  சாப்பிடுங்கள்.
  • தினசரி  4   கப்  காபி  பருகலாம்.  ஆரோக்கியம்  காக்கிறேன்  பேர்வழியென்று  காபியையே  துறக்க  வேண்டாம்.  அளவாக  காப்பி  பருகுவது  என்பது  சர்க்கரை  நோய்,  உணவுக்குழாய்  கேன்சர்,  ஈரல்  நோயிகளைத்  தடுக்கும்  என்பது  ஆய்வாளர்களின்  கருத்து.
  • தினந்தோறும்  5   வகை  பழங்கள்,  காய்கறிகள்  சாப்பிடுவது  ஆரோக்கிய  வாழ்வுக்கு  அடித்தளமிடும்.  பழங்கள்,  காய்கறிகளில்  உள்ள   'ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்'   கேன்சர்,  இருதய   நோயிகளைத்  தடுக்கும், நோயித் தொற்றுக்கு  எதிராக   இருக்கும்.  முன்றுக்கு  இரண்டு  என்ற  விகிதத்தில்  காய்கறி,  பழங்கள்  எடுத்துக்  கொள்ளலாம்.  காய்கறிகள் அதிகமான  நார்ச்சத்தையும்,  குறைவான சர்க்கரை  சத்தையும்  கொண்டுள்ளன.
  • வயதுக்கு  வந்தவர்கள்  தினமும்  6   கிராமுக்கு  மேல்  உப்பு  சேர்க்க  வேண்டாம்.  சமையல்  செய்யும்போது  மட்டும்  உப்பு  சேர்க்கவேண்டும்.  பிரெட்,  பாக்கிங்  உணவு  வகைகளில்  அதிக  உப்பு  மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
  • மொத்தம்  7   வகையான  நிறங்களை  கொண்ட  காய்கறிகள்,  பழங்கள்  இருக்கின்றன.  ஒவ்வொரு  வண்ண  காய்கறி,  பழங்களும்  வெவ்வேறு  வகையான  'ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை'  கொண்டிருக்கிறன.  எனவே  எல்லா  வண்ண  காய்கறி,  பழங்களும்  உங்கள் உணவில்  இருக்கட்டும். 
  • தினமும்  8  கப்  திரவம்  குடிப்பது   அவசியம்.  ஆனால் அது  எல்லாம்   தண்ணீராக  இருக்க  வேண்டும்  என்ற  அவசியமில்லை.   டீ,  காபியும்  இதில்  இடம்பெறலாம்.
  • சராசரியாக  பெண்கள்  9 வகை  மாவுசத்து  உணவுகளை  (ஆண்களுக்கு  11  வகை)  சாப்பிடவேண்டும்.  ஒரு  துண்டு ரொட்டி,  முட்டை  அளவு  உருளைக்  கிழங்கு,  28  கிராம்  சாதம்  போன்றவை  இதில்  அடங்கியிருக்கலாம்.
  • சாதரணமாக  குளிபானங்களில் 10  சதவீத  சர்க்கரை  உள்ளது.  அதாவது  ஒரு   புட்டியில்  150  கலோரி  இருக்கிறது.  தொடர்ந்து   குளிர்பானம்  பருகுவது   தொப்பைக்கு  ஒரு  முக்கிய  காரணம். 'டயட் '   குளிர்பானங்களுக்கு  மாறலாம்.  ஜூஸுடன்  அதிக தண்ணீர்  சேர்த்துப்   பருகலாம்.
  • காலை  உணவும்,  மதிய  உணவும்  11  மணியை  தாண்ட வேண்டாம்.  அதிகப்  பசியின்  போது  நீங்கள்  அதிகமாக   சாப்பிடுவீர்கள்.
  • பொதுவாக   பெண்கள்  உணவில்  12   மில்லி   கிராம்     இரும்புச் சத்தை  எடுத்துக்கொள்கிறார்கள்.  இரும்புச்சத்து  செறிந்த  உணவுகளை  உங்கள்  உணவில் தினசரி  சேர்த்துக்  கொள்ளுங்கள்.
  • சாதாரணமாக   நாம்  நம்  ஒவ்வொரு  கிலோ  எடைக்கும்  26   கலோரி   உணவு  சாப்பிடலாம்.
  • பனை அல்லது தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான பதநீர், கள் போன்றவற்றை  தினமும் ஒரு கோப்பை அருந்தலாம். 
  • நீங்கள்  ஒருமுறை  உணவை  விழுங்கும்போது  15  முறை  மெல்ல  வேண்டும். நாம்  சராசரியாக  7   முறைதான் உணவை  மேல்கிறோம்.
  • அங்களுக்கு  தினசரி  16   சதவீதபுரதம்  அவசியம்.  அதாவது  55  கிராம். பெண்களுக்கு  என்றால்  45  கிராம்.
  • நாம்  அனைத்து  விதமான சத்துக்களையும்  பெற,  ஒவ்வொரு  3  நாட்களுக்கும்  17   வகையான உணவு வகைகளை  உண்ண  வேண்டும் என்கின்றனர்  உணவியல்  நிபுணர்கள்.
  • அனைவருக்கும்  தினசரி  18   கிராம் நார்சத்து  தேவை.  அதற்கு தானியங்கள்,  பழங்கள்,  காய்கறிகள்  ஆகிறவை  நல்ல  ஆதாரங்கள்.
  • மொத்தம்  19   வகையான  தாது  உப்புகள்,  வைட்டமின்கள்  அனைவருக்கும்   அவசியத்  தேவை  என்பது  மருத்துவர்களின்  கருத்து.
  • உங்கள்  தினசரி  உணவில்,  கொழுப்பு  20  கிராம்களுக்கு  அதிகமாக இருக்கக்கூடாது.  உங்கள்  தினசரி  கலோரிகளில்   35   சதவீதத்துக்குள்   தான்  கொழுப்பின்   பங்கு  இருக்க  வேண்டும்.
  • பால்  சார்ந்த  உணவு  வகைகளில்  21,  ஒவ்வொரு  வாரமும்  உங்கள்  உணவுப்  பட்டியலில்  இருப்பது  கட்டாயம்.  தினசரி  மூன்று  வகையான  பால்சார்ந்த  உணவுப்  பொருட்களை  சாப்பிடுங்கள்.

புதன், 21 செப்டம்பர், 2011

காய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2

கத்தரிக்காய்
என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.


முருங்கைக்காய்

என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி
யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.


மாங்காய்
என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.


அவரைக்காய்

என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.

அத்திக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.


பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும 


கோவைக்காய்

என்ன இருக்கு : விட்டமின் ஏ
யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு
பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.

புடலங்காய்

என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.


பாகற்காய்

என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.


சுரைக்காய்
என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.


பூசணிக்காய்
என்ன இருக்கு: புரதம், கொழுப்பு
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.


கொத்தவரைக்காய்
என்ன இருக்கு : நார்ச்சத்து
யாருக்கு நல்லது : நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பலன்கள்: ருசி மட்டுமே


வாழைக்காய்

என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் இ.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்
யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.


வெள்ளரிக்காய்

என்ன இருக்கு: விட்டமின் ஏ, பொட்டாசியம்
யாருக்கு நல்லது: சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு
பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.


சுண்டைக்காய
என்ன இருக்கு: விட்டமின் சி
யாருக்கு நல்லது : சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்
பலன்கள்: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.


பலாக்காய்

என்ன இருக்கு : சுண்ணாம்புச்சத்து
யாருக்கு வேண்டாம் : வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு
பலன்கள் : செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.


பப்பாளிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.
யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்
யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள் :
  • சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
  • பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
  • பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
  • பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
  • நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
  • பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
  • பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
  • பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
  • பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
  • பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
  • பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
  • பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
களாக்காய்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, சி.
யாருக்கு நல்லது : மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த
மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும்.


நெல்லிக்காய்
என்ன இருக்கு : விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட், கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட
யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி.
பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை
பாதுகாக்கும். இதயம் நுரையீரலை வலுவூட்டும்.

காரட்
என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.

பீன்ஸ்
என்ன இருக்கு : புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள்.
யாருக்கு நல்லது : ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
யாருக்கு வேண்டாம் : குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும்.
பலன்கள் : பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பளபளப்புக்கு உதவும். வாயு நீக்கும்.

பீட்ரூட்
என்ன இருக்கு: க்ளூகோஸ்
யாருக்கு நல்லது : ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும்.
யாருக்கு வேண்டாம் : சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ரத்தத்தை வளப்படுத்தும். சுறுசுறுப்பை அளிக்கும். மேனி நிறம் பெறும்.

நூல்கோல்
என்ன இருக்கு : சுண்ணாம்புச் சத்து
யாருக்கு நல்லது : ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு,சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம் : உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு.
பலன்கள் : ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும்.
முள்ளங்கி (வெள்ளை)
என்ன இருக்கு : நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து.
யாருக்கு நல்லது : சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள் : அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.

முள்ளங்கி (சிவப்பு)
என்ன இருக்கு : கந்தகம், கால்சியம், விட்டமின் சி.
யாருக்கு நல்லது : ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு.
பலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும்.

காலிஃபிளவர்
என்ன இருக்கு : பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
பலன்கள் : மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.

முட்டைக்கோஸ்
என்ன இருக்கு : சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ.
யாருக்கு நல்லது : சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
யாருக்கு வேண்டாம் : பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும்.

நார்த்தங்காய்
என்ன இருக்கு : சிட்ரஸ் ஆசிட்
யாருக்கு நல்லது : அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்

BENEFITS OF BLACK URAD DHAL(Ulunthu)

How to prepare a healthy food using Black Urad Dhal?

* Handful of Black Urad Dhal (Do not remove the skin)
* Brown sugar or palm sugar according to taste
* Handful of fresh grated coconut

Add enough water to cover a handful of black dhal. Add salt and boil until the urad dhal is cooked. Combine the cooked grain, palm sugar or brown sugar and fresh grated coconut into a grinder and grind into a thick paste. Role them into round balls and serve.
Urad dhal can also be used to make “Kali”. To prepare “Kali”, urad dhal flour should be used. Add the flour, fresh grated coconut, hot milk, sugar and salt. Mix until a thick paste is formed. “Ulunthu Kali” is healthy food and it has been a tradition among Tamils from yester years to give Ulunthu Kali to young girls when they reach puberty. It is believed that Ulunthu Kali strengthens the stomach muscles and prepares the young female for her adulthood.

Benefits of Urad Dhal:
a) Develops density of the bones
b) helps cure nerve problems around the neck area.